நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தியாகத்திருநாளாம் பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகள் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

இறைவனின் தூதரான இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில, உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பக்ரீத்தை முன்னிட்டு ஜமா மசூதியில் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஒரு சேர தொழுகையில் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.தொழுகைக்குபின் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறி கொண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மகிம் மக்தூம் அலி மஹிமி மசூதிக்கு வெளியே அனைத்து இஸ்லாமியர்களும் அதிகாலையிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர், ஒருவரையொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

டெல்லியில் ஜமா மஸ்ஜித் மசூதியில் பக்ரீத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சிறார்கள் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. இதனிடையே, சிறப்பு தொழுகையின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கேரளாவிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கொச்சி எர்ணாகுளத்தில் உள்ள சலாபி ஜும்ஆ மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டார். இதேபோன்று திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 







varient
Night
Day