நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அகமதாபாத்தில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெகு உற்சாகமாக ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிகொண்டு உற்சாகத்துடன் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ள நிலையில், பிரயாக்ராஜ் பகுதியில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெகு உற்சாகமாக ஹோலியை கொண்டாடினர். அப்போது அவர்கள் குழல் மூலம் வண்ண கலவையை பீய்ச்சியடித்தும், வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவியும் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது வண்ண வண்ண சாயப் பொடிகளை ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டு உற்சாக நடனமாடினர். இந்த கொண்டாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் வாசிகளும் கலந்து கொண்டு எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  

பிரபல நாட்டுப்புற பாடகியும், பத்ம விருது பெற்றவருமான மாலினி அவஸ்தி, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். அப்போது அவரது இல்லத்தில் குவிந்த பெண்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பீய்ச்சியடித்து ஹோலியை கொண்டாடினர். தொடர்ந்து பிரபலமான நாட்டுப்புற பாடல்களை பாடி மாலினி அவஸ்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள ஜூஹு கடற்கரையில் பொதுமக்கள் உற்சாமாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என வயது வித்தியாசமின்றி ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளை பூசிகொண்டு ஹோலியை கொண்டாடினர்.

சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ராய்ப்பூரில் உள்ள சாலைகளிலும் ஹோலி பண்டிகை களைகட்டியது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், குழாய்கள் மூலம் வண்ண கலவையை பீய்ச்சியடித்து ஹோலியை கொண்டாடினர். இதனால் ராய்ப்பூர் சாலைகள் முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது. 

Night
Day