நாட்டின் அறிவியல் பயணத்தின் அடையாளம் இந்திய வானிலை ஆய்வு மையம் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய வானிலை ஆய்வு மையம் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்தது மட்டுமின்றி, அறிவியல் பயணத்தின் அடையாளமாகவும் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 


டெல்லியில் நடந்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ம் ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு நாணயத்தை வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளை, இந்திய வானிலை ஆய்வு மையம் குறைத்துள்ளதாகவும், அறிவியலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஒரு நாட்டின் பெயரை உலகளவில் உயர்த்தும் எனவும் கூறினார். மேலும் நிலநடுக்கங்களுக்கான எச்சரிக்கை அமைப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Night
Day