நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு - செயலி, இணையதளம் தயார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள செயலி மற்றும் இணையதளம் தயராக உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு திட்டமிட்டதாகவும் கொரோனா பேரிடர் காரணமாக அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில் எடுக்கப்பட உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பாக அமையும் எனவும் இதற்காக மொபைல் செயலி மற்றும் தனி இணையதளம் ஆகியவை உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் விளக்கம் அளித்துள்ளார்.

Night
Day