நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை - பிரதமர் மோடி பதிலுரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாட்டில் அனைவருக்குமான வளர்ச்சி என்பதை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், குடியரசு தலைவர் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும் இருந்ததாக கூறினார். காங்கிரசிடமிருந்து 'அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி", என்பதை எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறாகும் என்றும், அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றும் தெரிவித்தார். காங்கிரசின் முழு கட்சியும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பேசிய பிரதமர், காங்கிரசுக்கு குடும்பம்தான் முக்கியம் என்றும், பாஜகவுக்கு நாடுதான் முக்கியம் எனவும் கூறினார்.

Night
Day