நாட்டில் வெறுப்பு, வன்முறையை உருவாக்‍க பாஜக திட்டம்: உத்தவ் தாக்‍கரே குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக வன்முறைகளை தூண்டி விட்டுள்ளதாக உத்தவ் தாக்‍கரே குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் நடைபெற்ற உத்தவ் தாக்‍கரே தலைமையிலான சிவசேனா கட்சி பொதுக்‍ கூட்டத்தில் உத்தவ் தாக்‍கரே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றிய சட்டத்தை 5 ஆண்டுகள் கழித்து அமல்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மக்‍களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வாக்‍கு வங்கியை குறி வைத்தே மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி இருப்பதாகவும் அவர் சுட்டிக்‍காட்டினார். நாட்டில் மத வெறுப்பு, மோதல்கள் ஏற்படவே பாஜக விரும்புவதாக உத்தவ் தாக்‍கரே குற்றம் சாட்டினார்.

Night
Day