நாளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் சஞ்சீவ் கண்ணா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நாளை பதவியேற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. நாளை பதவியேற்கும் சஞ்சீவ் கண்ணா, வரும் 2025 மே மாதம் 13-ம் தேதி பணி ஓய்வு பெறுவார். தேர்தல் பத்திரங்கள் திட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான 370வது பிரிவு ரத்து என உச்ச நீதிமன்றத்தின் பல முக்கிய தீர்ப்பளித்த அமர்வில் இருந்தவர் சஞ்சீவ் கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.  

varient
Night
Day