நாளை மறுநாள் கூடுகிறது காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், 232 இடங்களை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவான எதிர்க்கட்சிக்காக செயல்பட போகிறது. ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய வகையில் அதிக மக்களவை உறுப்பினர்களை கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கட்சியின் தலைமைக்கு பரிந்துரைத்து வருகின்றனர். இந்நிலையில், வரும் நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். கூட்டம் அன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், காங்கிரஸ் கட்சி மறு சீரமைப்பு, நடப்பு அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Night
Day