நிதிப்பற்றாக்‍குறை அதிகரிப்பது மிகவும் கவலையளிக்‍கிறது -காங். எம்.பி. மணீஷ் திவாரி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிதிப்பற்றாக்‍குறை தொடர்ந்து அதிகரிப்பது மிகவும் கவலையளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 6வது பட்ஜெட்டை தாக்‍கல் செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.யுமான மணீஷ் திவாரி, மத்திய அரசின் நிதிப்பற்றாக்‍குறை தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். மத்திய நிதியமைச்சர் தாக்‍கல் செய்த இடைக்‍கால ​பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்‍குறை 18 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாக சுட்டிக்‍காட்டினார். இதன் மூலம் மத்திய அரசு தனது செலவினங்களுக்‍கு அதிகளவில் கடன் பெறுவது தெரியவந்துள்ளதாகவும், இந்த நிதிப்பற்றாக்குறை அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்‍கும் என்று மணீஷ் திவாரி தெரிவித்தார்.

Night
Day