நிதியமைச்சக ஊழியர்கள் AI செயலியை பயன்படுத்த தடை - மத்திய அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அலுவலக சாதனங்களில் எந்த Al கருவிகள் அல்லது செயலிகளை பயன்படுத்த தனது ஊழியர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. 

Al கருவிகள் மற்றும் AI செயலிகள், அரசாங்கத் தரவு மற்றும் ஆவணங்களின் ரகசியத்தன்மைக்கு ஆபத்தை விளைவிப்பதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக நிதித்துறை செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சில AI கருவிகளையும் பெயரிட்டு, இவற்றை அலுவலக சாதனங்களில் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே,  இந்தியா அதன் முதல் அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரியை இன்னும் 10 மாதங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் என்று ரயில்வே மற்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

Night
Day