நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால், எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பாரபட்சமானது, அபாயகரமானது என்றும், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் புறக்கணிப்பார்கள் என்றும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். பா.ஜனதா ஆட்சியின் உண்மையான மற்றும் பாரபட்சமான நிறங்களை மறைக்க மட்டுமே நடத்தப்படும் ஒரு நிகழ்வில் பங்கேற்க மாட்டோம் என்றும் கே சி வேணுகோபால் பதிவிட்டுள்ளார். 

Night
Day