நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பதிலடி - பிரதமர்

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்‍குதலுக்‍கு கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்‍குதலுக்‍கு காரணமானவர்களுக்‍கு கற்பனைக்‍கு அப்பாற்பட்ட வகையில் பதிலடி தரப்படும் என்று  தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் மதுபானியில் ​நடைபெற்ற விழாவில் 13 ஆயிரத்து 450 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். விழாவில், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்‍குதலில் உயிரிழந்தவர்களுக்‍கு பிரதமர் மோடி ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு தேசம் துணை நிற்கும் என்று  உறுதியளித்தார். பயங்கரவாதிகள் மட்டுமின்றி அவர்களுக்‍கு துணையாக நிற்பவர்களும் அழித்து ஒழிக்‍கப்படுவார்கள் என்றும், பஹல்காம் தாக்‍குதலுக்‍கு காரணமானவர்களை ஒவ்வொருவராக கண்டுபிடித்து வேட்டையாடுவோம் எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் ஆன்மாவை தாக்கியவர்களை விடமாட்டோம் என்றும், நாட்டில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிப்போம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Night
Day