நிலவில் 160 கி.மீ. அகலம் பள்ளம் - சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்‍ஞான் ரோவர் கண்டுபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிலவில் 160 கிலோ மீட்டர் அகலமுள்ள பள்ளம் இருப்பதை, சந்திரயானின் பிரக்ஞான் ரோவர் கண்டுபிடித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் - 3 விண்கலத்தின், 'விக்ரம் லேண்டர்' கலன், நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி தரை இறங்கியது. மொத்தம் 26 கிலோ எடையுடன் ஆறு சக்கரங்களை உடைய, பிரக்ஞான் ரோவர் கலன் 'ரிமோட் கார்'  அங்கு சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டது. ரோவர் மூலம் பெறப்பட்ட படங்கள், தகவல்கள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் 160 கிலோமீட்டர் அகலமுள்ள பள்ளம் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தகவலை ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் பகிர்ந்துள்ளனர். ரோவர் 350 கிலோமீட்டர் தொலைவில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்த போது தான், பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Night
Day