எழுத்தின் அளவு: அ+ அ- அ
நீட் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
கடந்த மே 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான பல்வேறு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், கடந்த 8ம் தேசி நடைபெற்ற விசாரணையின்போது நீட் விவகாரம் தொடர்பாக முழு விவரங்களை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமை மற்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி உச்சநீதிமன்றத்தில் நேற்று தேசிய தேர்வு முகமை மற்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் ஐஐடி மெட்ராஸ் மேற்கொண்ட தரவு பகுப்பாய்வு அடிப்படையில் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததற்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்பதைக் காட்டுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் ஜூலை மூன்றாவது வாரத்தில் 4 சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படும் எனவும் தேர்வாளர்கள் எவரேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எந்த நிலையில் இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதேபோல் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் டெலிகிராம் வீடியோக்கள் போலியானவை என்று தெரிவித்துள்ளது.