நீட் தேர்வு நடைமுறையில் எந்த குறைபாடும் இல்லை - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஒட்டுமொத்த நீட் தேர்வு நடைமுறையில் எந்த குறைபாடும் இல்லை என்பதால் நீட் மறுதேர்வு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ததாக உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் தேர்வினை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக விரிவான விளக்கத்துடன் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒட்டுமொத்த நீட் தேர்வு நடைமுறையில் எந்த குறைபாடும் இல்லை என்பதால் மட்டுமே மறுதேர்வு கோரிய மனுக்களை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தது. தேர்வு மையத்தை ஒதுக்கும் செயல்முறையை மதிப்பாய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், தேர்வு மையங்களின் கண்காணிப்பு உள்ளிட்டவைகளை மத்திய அரசின் குழு கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தது. மேலும், இஸ்ரோ முன்னாள் சேர்மன் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட சீரமைப்புகுழு பரிந்துரை அறிக்கையை வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

Night
Day