நீட் தேர்வு முறைகேடு வழக்கில் முழுத் தேர்வையும் ரத்து செய்யாதது ஏன் - மம்தா பானர்ஜி கேள்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


உச்ச நீதிமன்ற உத்தரவால் நியமனம் ரத்து செய்யப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களின் வேலைகளைப் பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நீட் தேர்வு முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றம் முழுத் தேர்வையும் ரத்து செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொல்கத்தாவின் நேதாஜி விளையாட்டரங்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் வழக்கில், பலர் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை என்றார். நீட் தேர்வில், பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தேர்வை ரத்து செய்யவில்லை எனக் குறிப்பிட்ட அவர் மேற்கு வங்கம் ஏன் குறிவைக்கப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

Night
Day