நீட் தேர்வு : கருணை மதிப்பெண் ரத்து - 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட ஆயிரத்து 563 பேருக்கு மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாணவர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், தற்போது அது தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. அதில், நேர இழப்பை ஈடுகட்ட கருணை மதிப்பெண் பெற்ற ஆயிரத்து 563 பேரின் முடிவுகளை மதிப்பாய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், நேர விரயம், கேள்வித்தாள் மாற்றம் ஆகிய காரணங்களுக்காக 5 கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மறுத்தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கான மறுத்தேர்வு வரும் 23-ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான முடிவுகள் வரும் 30-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 வாரத்தில் தேசிய தேர்வு முகமை பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day