நீட் மறுதேர்வு நடத்தப்படாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு  முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என தெரிவித்த உச்சநீதிமன்றம், மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை எனவும் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தாலும், இது நீட் தேர்வின் புனிதன்மையை முழுவதும் சீர்குலைத்து விடும் என எடுத்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்தது. சிபிஐ விசாரணையில் யாரேனும் பிடிப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

Night
Day