நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறவுள்ள முதுநிலை நீட் தேர்வை 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதவுள்ளனர். காலை, மாலை என நடைபெறவுள்ள தேர்வுகள் வெவ்வேறு மையங்களில் நடைபெறவுள்ளதால், அதில் திருத்தங்கள் செய்யப்படும் வரை தேர்வுகள் ஒத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தொடரப்பட்டது. இன்றைய வழக்கு விசாரணையின்போது, காலை ஒரு மையத்திலும், மாலை மற்றொரு மையத்திலும் தேர்வு நடைபெறும் என கூறியுள்ளதால் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் உள்ளதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். மேலும் தேர்வுக்கான ஏற்பாடுகளை சரி செய்யும் வரை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார். அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், நாடு முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதக்கூடிய தேர்வை, ஒரு சிலருக்காக தள்ளி வைக்க முடியாது எனக்கூறினார். மேலும் ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை எனக் கூறிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Night
Day