நீட் முறைகேடு - நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

'நீட்' தேர்வு முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியானதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனையடுத்து அந்த தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் நீட் தேர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும் அவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். 

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸார் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். 



Night
Day