இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்க சதி நடப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். 21 ஓய்வுபெற்ற நீதிபதிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தவறான தகவல்கள் மற்றும் இழிவுபடுத்துவதன் மூலம் நீதித்துறையின் மாண்புக்கு களங்கம் விளைவிக்க சில பிரிவினர் முயற்சிப்பதாகவும், அரசியல் ஆதாயங்களுக்காக சில பிரிவினர் நீதித்துறைக்கு எதிராக செயல்படுவதாகவுகம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சிலர் தங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகாத நீதிமன்ற தீர்ப்புகளை இழிவாக விமர்சிப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...