நீதிபதி ஜாய்மால்யா பக்‌ஷி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்ற நீதிபதியாக நீதிபதி ஜாய்மால்யா பக்‌ஷி பதவி ஏற்றுக் கொண்டார்.  


உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஜாய்மால்யா பக்‌ஷியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் கடந்த ஆறாம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று பதிவியேற்றுக் கொண்ட ஜாய்மால்யா பக்‌ஷிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நீதிபதி ஜாய்மால்யா பக்‌ஷி நியமனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

Night
Day