நீரிழிவால் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிப்பு : அமைச்சர் அதிஷி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீரிழிவு நோயால் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ள நிலையில் ஜாமீன் பெற நாடகமாடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் உள்ளார். சிறையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. கெஜ்ரிவாலின் உடலில் சர்க்கரை அளவு 50-க்கும் கீழ் பலமுறை சென்றுள்ளது என்றும் சிறையில் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அவருக்‍கு பக்கவாதம் அல்லது மூளையில் ரத்தக்கசிவு போன்றவை ஏற்படலாம் எனவும் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அமைச்சர் அதிஷி கூறினார். சிறப்பு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஜாமீன் பெறவே கெஜ்ரிவால் உடல்நிலை குறித்த நாடகம் நடத்தப்படுவதாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டினார்.

Night
Day