நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாளத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, இந்தியாவிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

நேபாளத்தின் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் காலை 6.35 மணிக்கு சத்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி ஒன்றாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால் கடும் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

மேலும் இதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் குறித்தோ உயிரிழப்பு குறித்தோ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. 

இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட இந்தியாவிலும் உணரப்பட்டதால் மக்கள் கடும் அச்சமடைந்தனர். மேலும் வங்காளதேசம், பூடான், சீனாவிலும் இந்த நிலநடுக்கம் எதிரொலித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனால் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக நேபாள மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே தொடர்ந்து அதிர்வுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவித்துள்ளதுடன், அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Night
Day