பகவத்கீதை, நாட்டிய சாஸ்திரத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் - மோடி பெருமிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டியக்கலை ஆகியவை யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், உலகில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கு பெருமையான தருணம் இது என்றும், யுனெஸ்கோவின் சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டிருப்பது, நமது உயரிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகும் எனவும் தெரிவித்துள்ளார். பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை பல நூற்றாண்டுகளாக நமது நாகரீகத்தையும், உணர்வுகளையும் வளர்த்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Night
Day