பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து செபி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் நிதியை தவறாக பயன்படுத்தியதாக தொழிலதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அனில் அம்பானி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகள் தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. மேலும் பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ, எந்த ஒரு பதவியிலும் இருக்கக்கூடாது என அனில் அம்பானிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் செபி நடவடிக்கை எடுத்துள்ளது. 

Night
Day