பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடீர் ராஜினாமா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்‍கு அனுப்பியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக புரோகித்  அறிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்த நிலையில், புரோகித் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில அரசுக்கும், ஆளுநருக்‍கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் இந்த திடீர் முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. பஞ்சாப் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் பன்வாரிலால் புரோகித் வகித்து வந்தார். பன்வாரிலால் புரோகித் தமிழகத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day