படிப்பிற்காக கனடா செல்வதை புறக்‍கணிக்‍கும் இந்திய மாணவர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காலிஸ்தான் பிரிவினைவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே விரிசல் ஏற்பட்ட நிலையில், கனடாவில் படிக்‍க ​விரும்புவதை இந்திய மாணவர்கள் புறக்‍கணிக்‍கத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு இந்தியாவே காரணம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கூறியதை அடுத்து இருநாடுகள் இடையே  விரிசல் ஏற்பட்டது. இந்த​நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கனட புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்திய மாணவர்களின் வருகை 86 சதவீதம் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கனடாவில் படிக்‍கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள் மட்டும் 41 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்‍கது.

Night
Day