பட்ஜெட்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2024-25 நடப்பாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த மாநிலங்களுக்கு அதிக அளவிலான திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாக எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக ஆளாத மாநிலங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியுள்ளதாக குற்றம்சாட்டி, அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Night
Day