எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், கடந்த மார்ச் மாதம் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமனுக்கு திரெளபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு சென்ற நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றுள்ளார். தொடர்ந்து 7வது முறையாக நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.