பட்டய கணக்காளர் படிப்புக்கான இறுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த மே மாதம் நடைபெற்ற சிஏ படிப்புக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்திய பட்டய கணக்காளர் இறுதித் தேர்வு கடந்த மே மாதம் இரண்டு தொகுதிகளாக 2ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை நடைபெற்றது.

தற்போது இதன் முடிவுகள் வெளியான நிலையில், இணையதளங்கள் வாயிலான பதிவெண் மற்றும் வரிசை எண்களை கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நடைபெற்ற தேர்வில் 74 ஆயிரத்து 887 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 20 ஆயிரத்து 479 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் 2வது கட்டமாக நடைபெற்ற தேர்வில் 58 ஆயிரத்து 891 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 21 ஆயிரத்து 408 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Night
Day