பட்டாசுக்கான தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா - டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பட்டாசுக்கு முழுமையாக விதிக்கப்பட்ட தடை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசும், மத்திய உள்துறை அதிகாரத்திற்குட்பட்ட டெல்லி மாநகர காவல் ஆணையரும் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வு, ஒவ்வொரு ஆண்டும் மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் தீபாவளியின் போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு, அது காற்றில் பறக்க விடப்படுவது வழக்கமாக உள்ளதாக கண்டனம் தெரிவித்தது. பட்டாசுத் தடை உத்தரவை செயல்படுத்த ஏதாவது வேலை செய்ய வேண்டும் என டெல்லி அரசை வலியுறுத்திய நீதிபதிகள், அடுத்த ஆண்டாவது அதற்கான வழிமுறைகளை உருவாக்கி, டெல்லி மூச்சுத் திணறல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியது. 

Night
Day