பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளை உற்பத்தி செய்ய உத்தரகாண்ட் அரசு தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளை உற்பத்தி செய்ய உத்தரகாண்ட் அரசு தடை விதித்துள்ளது. 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேதம் மற்றும் இயற்கை தயாரிப்புகள் என்ற பெயரில் பல்பொடி, சோப் தொடங்கி சமையல் எண்ணெய் வரை தயாரித்து விற்பனை செய்கிறது. சில மாதங்களுக்கு முன் பதஞ்சலி வெளியிட்ட ஆயுர்வேத தயாரிப்பின் விளம்பரத்தை எதிர்த்து இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, பதஞ்சலி நிறுவனர்கள் பாபா ராம்தேவ், பால கிருஷ்ணா நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்டனர். மேலும், பத்திரிகை வாயிலாகவும் மன்னிப்பு கோரினர். இவ்விகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், பதஞ்சலி நிறுவனத்தின் 14 மருந்துகளை உற்பத்தி செய்ய உத்தரகாண்ட் அரசு தடை விதித்துள்ளது. 

varient
Night
Day