பதஞ்சலி வழக்கில் இடை மனுதாரராக சேர்க்க கோரிய நபருக்கு ரூ.10,000 அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பதஞ்சலி தொடர்பான வழக்கில் தன்னை இடை மனுதாரராக சேர்க்க கோரிய நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கு விசாரணை  உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் ஹசனாவுதீன் அமனுல்லாஹ் ஆகியோரின் அமர்வில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், ஒருவர் தன்னையும் இந்த வழக்கில் இடை மனுதாரராக சேர்த்துக் கொள்ள கோரி மனு தாக்கல் செய்தார். அவரது மனுவைத்தள்ளுபடி செய்த நீதிபதிகள், இது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு என்றும், இந்த வழக்கில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். 

varient
Night
Day