பத்துக்கும் மேற்பட்ட தொலைபேசிகளுடன் ரயில் நிலைய அதிகாரியின் மேஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரயில் நிலைய அதிகாரி ஒருவரின் அலுவலக மேஜையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டேஷன் மாஸ்டர்கள் எனப்படும் ரயில் நிலைய அதிகாரிக்கு, ரயில்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல், நிலையங்களுக்கு வந்து செல்வதையும், புறப்படுவதையும் உறுதி செய்வது, போக்குவரத்து சிக்னல்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் உள்ளன. இதனை வெளிப்படுத்தும் விதமாக தனது அலுவலக மேஜையின் படத்தை ரயில் நிலைய அதிகாரி ஒருவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு திறந்த பதிவேடு மற்றும் குறைந்தபட்சம் பத்து தொலைபேசிகள் உள்ளன. இந்த புகைப்படம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் ஆயிரம் விருப்பங்களையும் குவித்துள்ளது.

Night
Day