பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதி பூண்டுள்ளது - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடியின் அரசு உறுதிபூண்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் 2 நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு இன்று தொடங்குகிறது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையுடன் பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ளார். இன்று தொடங்கும் இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, பாரதத்தின் பாதுகாப்பு கோட்டையை வலுப்படுத்த முகவர்களிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தும் என்றும் இதில் உரையாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 

varient
Night
Day