பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். பயங்கரவாத தாக்குதலில் உறவினர்களை இழந்தவர்கள், அமித்ஷாவை பார்த்ததும், கண்ணீர்விட்டு கதறிய மக்களை தேற்றிய அமித்ஷா, அவர்களுக்கு அமித்ஷா ஆறுதல் கூறினார். இதுகுறித்து அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில், பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதாக பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக பயங்கரவாதிகள் ஒருபோதும் தப்பமுடியாது எனவும், பயங்கரவாதிகள் முன்பு தேசம் ஒருபோதும் தலைகுனித்து நிற்காது எனவும் ஆக்ரோஷமாக பதிவிட்டுள்ளார்.

Night
Day