எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 2 பேரின் வீடுகள் குண்டுகள் வெடித்தும், பொதுமக்களால் இடித்து நொறுக்கப்பட்டும் தரைமட்டமாக்கப்பட்டன.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள பயங்கர துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அசிப் ஷேக், மற்றும் அடில் ஹுசைன் தோக்கர் ஆகிய இருவரின் வீடுகளும் இரவோடு இரவாக தரைமட்டமானது. பயங்கரவாதிகள் வைத்திருந்த குண்டுகள் வெடித்து சிதறியதில் அவர்களின் வீடுகள் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வீட்டை இடித்து சேதப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே அந்தப் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியிலும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.