பயிற்சி பெண் ஐஏஎஸ் பூஜா கேட்கர் மீது அடுக்கடுக்காக குவியும் புகார்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்த பூஜா கேட்கர் மீதான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. ஏற்கெனவே பூஜா கேட்கர் மீது பல புகார்கள் உள்ள நிலையில், தற்போது ஐஏஎஸ் தேர்வின் போது அவர் அளித்த விவரங்கள் அனைத்தும் பொய் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஓ.பி.சி.பிரிவின் கீழ்  தேர்வான அவருக்கு 22 கோடி ரூபாய் சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து பூஜா கேட்கர் மீதான புகார்கள் மற்றும் பிற விவரங்களை சரிபார்க்க கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் மூத்த அதிகாரி ஒருவர் தலைமையில் ஒற்றை உறுப்பினர் குழு அமைக்கப்படுவதாகவும் இக்குழு 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

Night
Day