பயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்கக் கூடாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயிற்சி மையங்களில் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய வழிகாட்டுதல்களை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இனிமேல் மேல்நிலைப் பள்ளித் தேர்வை வெற்றிகரமாக முடித்த பின்னரே சேர்க்கை நடைமுறை அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் தரவரிசை அல்லது நல்ல மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிப்பது போன்றவற்றைச் பயிற்சி மையங்கள் செய்யக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலை, தீ விபத்துகள், பயிற்சி மையங்களில் போதிய வசதியின்மை மற்றும் அவர்கள் பின்பற்றும் கற்பித்தல் முறைகள் குறித்து அரசுக்குப் தொடர் புகார்கள் வந்ததை  அடுத்து புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day