பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் பாகிஸ்தான் பொதுத்தேர்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு இடையே பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.  காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தல் நடைமுறைகள் தொடங்கியதில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டு வெடிப்புகளும் உயிரிழப்புகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளதால் பதற்றமான சூழல் தொடர்கிறது. இதையடுத்து ஆறரை லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இம்ரான் கானின் தேர்தல் சின்னம் முடக்கப்பட்ட நிலையில், ராணுவ ஆதரவு பெற்ற முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் இந்தத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவாா் எனக் கூறப்படுகிறது.

Night
Day