பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகளை ஹரியானா-பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார் கண்ணீர் புகை வீசி கலைக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகளின் கோரிக்கையான விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வது உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக மத்திய அரசு அறிவித்தது. எனினும் இன்னும் அதற்கு தீர்வு காணப்படவில்லை. இதனை வலியுறுத்தி விவசாயிகள் தற்போது மீண்டும் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். டெல்லியிலேயே முகாமிட்டு விவசாயிகள் போராட்டத்தைத் தொடர முடிவு செய்தனர்.

இதற்காக சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக அறிவித்தனர். விவசாயிகள் பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தநிலையில் அறிவித்தபடி டெல்லியை நோக்கி பேரணி செல்ல முயன்ற விவசாயிகளை, ஹரியானா-பஞ்சாப் இடையேயான ஷம்பு எல்லையில் போலீசார் தடுத்தி நிறுத்தி, கண்ணீர் புகைக் குண்டுகளைப் வீசி பேரணியை கலைக்க முயற்சித்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Night
Day