பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 6 மணி நேரத்தில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாலை போக்குவரத்து மற்றும் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மும்பையில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 6 மணி நேரத்தில் 30 சென்டி மீட்டர் மழை கொட்டித்தீர்த்ததால், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால் புறநகர் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. 

Night
Day