பஹல்காம் தாக்குதல் - நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுக ! - பிரதமருக்கு ராகுல் கடிதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்‍குதல் தொடர்பாக விவாதிக்‍க நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்‍கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்‍குதல் தொடர்பாக விவாதிக்‍க நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்‍குதல் நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்‍கும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்துக்‍கு எதிராக நாட்டில் உள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பதை காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மக்‍கள் பிரதிநிதிகள் அனைவரும் தங்களது ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மையை காட்டுவர் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

Night
Day