பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து டெல்லி, மத்திய பிரதேசத்தில் கடையடைப்பு போராட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை கண்டித்து டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலா தளமான பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் காரணமாக சாந்தினி சௌக் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் போபால் நகரம் வெறிச்சோடியது.

Night
Day