பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து 2வது நாளாக முழு கடையடைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து இரண்டாம் நாளாக முழு கடையடைப்பு நடத்தப்பட்டதால் அனந்த்நாக் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த 22ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியேறினர். பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் கடையடைப்பு நடைபெற்றது. இந்நிலையில் 2வது நாளாக முழு கடையடைப்பு நடத்தப்பட்டதால் அனந்த்நாக் பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதால் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.

Night
Day