பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய வீரரை விடுவிக்க பாகிஸ்தான் மறுப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
17 ஆண்டுகளாக எல்லை பாதுகாப்புப்படையில் பணியாற்றி வரும் பூர்ணம் குமார் ஷா என்பவர், பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு படையினர் கைது செய்தனர். காஷ்மீர் பயங்ரவாத தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், இந்திய வீரர் பூர்ணம் குமாரை விடுதலை செய்ய பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 48 மணிநேரத்தில் 3 முறை இந்திய, பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்புப்படை உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில்  பூர்ணம் குமாரை விடுதலை செய்ய பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. 

Night
Day