பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் ரூ.66.15 கோடியை செலுத்த நீரவ் மோடிக்கு ஆணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர்களை ஒப்படைக்கும்படி லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய 13 ஆயிரத்து 500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ் மோடி திருப்பிச் செலுத்தாமல் 2018-ல் லண்டன் தப்பிச் சென்றார். இந்த நிலையில், நீரவ் மோடிக்கு சொந்தமான ஃபயர் ஸ்டார் வைர டைமண்ட் துபாய் நிறுவனத்தின் மூலமாக தங்களுக்கு சேர வேண்டிய 66 கோடியே 15 லட்ச ரூபாயை மீட்டுத்தரக்கோரி, லண்டன் உயர்நீதிமன்றத்தில் பாங்க் ஆஃப் இந்தியா மனு தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம், நீரவ் மோடிக்கு சொந்தமான எந்தவொரு நிறுவனத்தையும் ஏலம்விட்டோ அல்லது விற்பனை செய்தோ தங்களுக்குச் சேர வேண்டிய தொகையை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மீட்டுக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

Night
Day