பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல, வன்முறையை தூண்டுபவர்கள் - ராகுல் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

18 ஆவது மக்களவைக் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது முதல் உரையை ஆற்றினார். அப்போது ஆளும் பாஜக அரசு மீது ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

வாழ்க அரசியல் சாசனம் என தனது உரையை தொடங்கிய ராகுல் காந்தி, 10 ஆண்டுகளாக இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் அரசியலமைப்பை பாதுகாப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும்,  பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து சிவன், குருநானக் படங்களை காட்டி அவர் உரையாற்றிய போது, மக்களவையில் பதாகைகளை காட்டி பேசக்கூடாது என ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார். தொடர்ந்து அதற்கு விளக்கமளித்த ராகுல் காந்தி,  சிவனின் திரிசூலம் என்பது வன்முறைக்கானது அல்ல என்றும் அது அகிம்சையின் குறியீடு என்றும் பதிலளித்தார். இதற்கு ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல என்றும் அவர்கள் வன்முறையை தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசிய அவர்,  வசதி படைத்த பணக்கார மாணவர்களுக்காகவே நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாகவும், நீட் தேர்வு வியாபார மயமாகிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்

Night
Day