பாஜகவின் ஒரு பிரிவு போல் செயல்படுகிறது CBI

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய புலனாய்வு அமைப்பான CBI, பாஜகவின் ஒரு பிரிவு போல் செயல்படுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார். சட்ட விரோதமாக சுரங்கங்களை ஒதுக்கிய வழக்கு தொடர்பாக விசாரணைக்கு  ஆஜராகுமாறு அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் நேற்று ஆஜராகவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மக்கள், மத்திய பாஜக அரசை அகற்றுவார்கள் என்றார். பாஜக ஆட்சியில், பணவீக்கம் உச்சத்தில் உள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தேர்தலுக்கு முன் சம்மன் அனுப்புவதை சிபிஐ வழக்கமாக்கியுள்ளதாகவும் சம்மனுக்குரிய பதிலை அனுப்பி விட்டதாகவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Night
Day